போட்டி தேர்வுகள் எப்போது ?? – TNPSC விளக்கம்
கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. அதில், அரசு பணியாளர் தேர்வாணைய குழுமமும் ஒன்று. ஊரடங்கு காரணமாக ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ள போட்டி தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அனைவரும் போட்டி தேர்வுகள் எப்போது என்ற ஆவலுடன் உள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்:
போட்டி தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, தேர்வாணையத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடுவது, தேர்வுகளை நடத்துவது உட்பட பல்வேறு முக்கிய விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
போட்டி தேர்வுகள் எப்போது ??
போட்டி தேர்வுகளை நடத்துவதற்கு முதலில் பொது போக்குவரத்துக்கு சீராக வேண்டும், மேலும் பொது முடக்கம் முழுமையாக சீராக வேண்டும் அதன் பின் தான் போட்டி தேர்வுகளை நடத்த முடியும் என டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது முடக்கம் முழுமையாக எப்போது சீராகும் என்பது யாரும் அறியாத ஒன்று எனவே தேர்வர்கள் நேரத்தை வீணடிக்காமல் எங்கள் பகுதியில் வழங்கி உள்ள பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மூலம் படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |