TNEA 2026 Round 3 Tentative Seat Allotment வெளியீடு – ஆகஸ்ட் 22 வரை முக்கிய அவகாசம்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை TNEA 2026 Round 3 Tentative Seat Allotment இன்று, ஆகஸ்ட் 21, வெளியிடப்பட்டுள்ளது. Round 3 கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது அல்லாட்மென்ட் விவரங்களை அதிகாரப்பூர்வ TNEA இணையதளத்தில் உள்நுழைந்து பார்க்கலாம்.
அதிகாரப்பூர்வ தளம்:
TNEA Online
மாணவர்கள் செய்ய வேண்டியது
- TNEA அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- உங்கள் Registered Email ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
- Round 3 Seat Allotment விவரத்தைப் பார்க்கவும்.
- ஒதுக்கப்பட்ட College மற்றும் Course/Branch விவரங்களை சரிபார்க்கவும்.
- கிடைக்கும் confirmation option-களில் தேவையானதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்யக்கூடிய முக்கிய விருப்பங்கள்
- Accept and Join
கிடைத்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவை ஏற்று சேரலாம். - Accept and Upward
தற்போதைய இடத்தை ஏற்றுக்கொண்டு, மேலான preference கிடைக்குமா என upward movement-க்கு செல்லலாம். - Decline and Upward
தற்போதைய allotment-ஐ ஏற்காமல், அடுத்த வாய்ப்புக்காக upward movement தேர்வு செய்யலாம். - Decline and Quit / Exit
கலந்தாய்வு செயல்முறையிலிருந்து வெளியேறலாம்.
முக்கிய தேதிகள்
நிகழ்வு |
தேதி |
|---|---|
Round 3 Tentative Allotment |
ஆகஸ்ட் 21, 2026 |
Tentative Allotment Confirmation |
ஆகஸ்ட் 21–22, 2026 |
Provisional Allotment |
ஆகஸ்ட் 23, 2026 |
College Reporting |
ஆகஸ்ட் 23–27, 2026 |
Upward Movement Allotment |
ஆகஸ்ட் 31, 2026 |
Confirmation செய்யாமல் விட்டால் ஒதுக்கப்பட்ட seat-ஐ இழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆகஸ்ட் 22, 2026க்குள் தேவையான option-ஐ தேர்வு செய்து confirmation செய்வது முக்கியம்.



























