PM-USP Scholarship 2026:
12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு
ஆண்டுக்கு ₹20,000 மத்திய அரசு உதவித்தொகை!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை (Admissions) மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. கல்லூரிப் படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்த சிரமப்படும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் ஒரு மிகச்சிறந்த திட்டம் தான் PM-USP (Pradhan Mantri Uchchatar Shiksha Protsahan) Central Sector Scheme.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கணிசமான கல்வி உதவித்தொகை நேரடியாக வழங்கப்படுகிறது.
திட்டத்தின் கீழ் எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?:
இத்திட்டத்திற்குத் தேர்வாகும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பு முடியும் வரை நிதியுதவி அளிக்கப்படும்:
- இளங்கலை (UG Courses):
பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் போன்ற சாதாரண இளங்கலை படிப்புகளுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ₹12,000 வழங்கப்படும். - முதுகலை (PG Courses):
கல்லூரி முடித்து முதுகலை படிப்புகளுக்குச் செல்லும் போது ஆண்டுக்கு ₹20,000 வரை நிதி உதவி கிடைக்கும். - தொழில்முறை படிப்புகள் (Professional Courses):
பி.இ, பி.டெக், மருத்துவம் போன்ற 4 அல்லது 5 ஆண்டுகள் கொண்ட படிப்புகளுக்கு 4-வது மற்றும் 5-வது ஆண்டுகளில் ஆண்டுக்கு ₹20,000 வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (Eligibility Criteria):
- மதிப்பெண் தகுதி:
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அந்தந்த போர்டுகளில் (State Board / CBSE) டாப் 80% விழுக்காடு (80th percentile) மதிப்பெண்களுக்குள் பெற்றிருக்க வேண்டும். - வருமான வரம்பு:
மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். - படிப்பு:
பகுதிநேரப் படிப்பு (Part-time) அல்லது தொலைதூரக் கல்வி (Distance Education) இல்லாமல், வழக்கமான கல்லூரிகளில் (Regular Courses) சேர்ந்திருக்க வேண்டும். - மற்றவை:
வேறு எந்த ஒரு மத்திய அரசு உதவித்தொகையையும் பெற்றுக்கொண்டிருக்கக் கூடாது.
தேவையான முக்கிய ஆவணங்கள் (Required Documents):
- 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (12th Marksheet)
- வருமானச் சான்றிதழ் (Income Certificate)
- சாதிச் சான்றிதழ் (Community Certificate)
- கல்லூரி போனஃபைட் சான்றிதழ் (College Bonafide Certificate)
- மாணவரின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள்
(Bank Passbook Copy linked with Aadhaar)
விண்ணப்பிக்கும் முறை மற்றும் நேரடி லிங்க் (How to Apply):
இத்திட்டத்திற்குத் தகுதியான மாணவர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தேசிய உதவித்தொகை இணையதளம் (National Scholarship Portal – NSP) மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய பதிவுகள் விரைவில் இந்த போர்ட்டலில் தொடங்கப்பட உள்ளன.
- விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ நேரடி லிங்க்:
National Scholarship Portal (NSP)
























