10 வது தகுதிக்கு ₹30,000+அரசு வேலை

0

டிகிரி இல்லையேன்னு கவலையா?
வெறும் 10-வது பாஸ் போதும்… மாதம் ₹30,000+
அரசு வேலை!”

நீங்கள் வெறும் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதும்! மாதம் ₹30,000 முதல் ஆரம்பமாகும் ஆரம்ப காலச் சம்பளத்துடன் மத்திய மற்றும் மாநில அரசுகளில் உயரிய பதவிகளில் அமர உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.இதற்காக நீங்கள் பெரிய அளவில் தேட வேண்டியதில்லை; 10-வது தகுதிக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும்
4 மாபெரும் அரசு வேலைவாய்ப்புகள் இதோ:

1. 🏛️ TNPSC Group 4
தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆகச்சிறந்த கனவு இது.

பதவிகள்:
கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர்
(Junior Assistant), தட்டச்சர்.

சம்பளம்:
ஆரம்பக் கையிருப்புச் சம்பளம் (In-hand) தோராயமாக ₹24,000 – ₹27,000.

தேர்வு முறை:
நேர்காணல் (Interview) கிடையாது.
ஒரே ஒரு எளிய எழுத்துத் தேர்வு மட்டும்தான்.

2. 🧳 SSC MTS 
மத்திய அரசு வேலைக்கு இங்கிலீஷ், ஹிந்தி தெரியணும் என்ற பயத்தை உடைக்கும் தேர்வு. வருமான வரித்துறை, பாஸ்போர்ட் ஆபீஸ் போன்ற பெரிய மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியலாம்.

பதவிகள்:
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS).
அலுவலகக் கோப்புகளைப் பராமரிக்கும் எளிய வேலை.

சம்பளம்:
ஆரம்பக் கையிருப்புச் சம்பளம் தோராயமாக ₹28,000 – ₹31,000.

தேர்வு முறை:
கணினி வழித் தேர்வு.
மிக முக்கியமாக, இந்தத் தேர்வை நீங்கள் முழுமையாகத் தமிழிலேயே எழுதலாம்!

3. 🚂 Railway Group D

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய இரயில்வேயில் நிரந்தர ஊழியராக மாறும் பொன்னான வாய்ப்பு.

பதவிகள்:
அசிஸ்டெண்ட் பாயிண்ட்ஸ்மேன், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுகளின் உதவியாளர்கள்.

சம்பளம்:
ஆரம்பக் கையிருப்புச் சம்பளம் கூடுதல் படிகளுடன் சேர்த்து எளிதாக₹27,000 – ₹32,000+ வரை செல்லும்.

தேர்வு முறை:
கணினி வழித் தேர்வு (தமிழில் எழுதலாம்) மற்றும் ஒரு எளிய உடற்தகுதித் தேர்வு.

4. SSC GD Constable 

நாட்டுக்காகத் துணிச்சலா வாழணும்” என்று துடிக்கும் ஏழைக் குடும்பத்து சிங்கங்களின் ஒரே லட்சியம்.

பதவிகள்:
BSF, CISF, CRPF போன்ற மத்திய பாதுகாப்புப் படைகளில் காவலர் (Constable) பணி.

சம்பளம்:
ஆரம்பக் கையிருப்புச் சம்பளமாகவே ₹32,000 – ₹35,000 கிடைக்கும்.
ரிஸ்க்கான பகுதிகளில் பணியாற்றினால் கூடுதலாக ₹15,000 வரை உயரும்!

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு (தமிழில் எழுதலாம்)
உடற்தகுதித் தேர்வு(உயரம், ஓட்டப்பந்தயம்).

10-வது தகுதி அரசு வேலைகளுக்கான நேரடி இணையதள இணைப்புகள்!”

TNPSC Group 4:  TNPSC Main Portal 
          SSC MTS & SSC GD Constable:  Staff Selection Commission (SSC) Website 
                   Railway Group D: Railway Recruitment Board (RRB) Chennai 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!