கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தமிழக அரசு அறிவித்த முக்கிய தகவல்..!!
தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், எந்தெந்தப் பாடப்பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, “மின்னணு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கல்லூரி மாணகர்களுக்காக 20 லட்சம் மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
இதற்கான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள http://www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் அணுகும் படி கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் டெண்டர் கோருவதற்கு வரும் ஜூன் 25 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது”. இதற்கான விளக்கக் கூட்டம் வரும் வரும் ஜூன் 6 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கல்லூரி மாணவர்களுக்கு, 8 GB RAM, 256 GB SSD கொண்ட Hard disk, 14 அல்லது 15.6 இன்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட இந்த மடிக்கணினி கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஓராண்டு உத்தரவாதச் சான்றும், மூன்று ஆண்டுகளுக்குச் சேவை சார்ந்த ஆதரவும் அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது”.


























