
தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிப்பு.. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டிற்கான தேர்வுகள் ஏப்ரல் 24 ஆம் தேதி முடிவடைந்தது. மேலும், ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்பட்டதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்தார். இதை தொடர்ந்து, 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் வருகின்ற ஜூன் 2, 2025 ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9 ஆம் தேதி திறப்பதாக பரவி வரும் செய்தி வதந்தி என்றும், ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பது உறுதி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது”.

























