டிப்ளமோ படிப்பில் சேர போறீங்களா..? அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறை.. முழு விவரம் இதோ..!!

0
டிப்ளமோ படிப்பில் சேர போறீங்களா..? அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறை.. முழு விவரம் இதோ..!!
டிப்ளமோ படிப்பில் சேர போறீங்களா..? அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறை.. முழு விவரம் இதோ..!!

டிப்ளமோ படிப்பில் சேர போறீங்களா..? அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறை.. முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், 10-ம் வகுப்பு முடித்தவர்கள் 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பிற்கும், 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிக்கும் சேர தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள், சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ரயில்வே தேர்வர்களின் கவனத்திற்கு., வெளியானது RRB NTPC தேர்வு தேதி… முழு விவரங்கள் இங்கே!!

அதாவது, தமிழ்நாட்டில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவிபெறும் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 1 லட்சத்திற்கு அதிகமான டிப்ளமோ இடங்கள் உள்ள நிலையில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிவில், மெக்கானிக்கல், விவசாயம், உற்பத்தி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. “இந்த டிப்ளமோ படிப்புகளில் சேர விருப்பும் மாணாக்கர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதை தொடர்ந்து, தொழிற்முறை பயிற்சியுடன் வரும் படிப்புகளை சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கு வயது வரம்பு கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக “முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் https://tnpoly.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்” என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!