TNPSC அடுத்தடுத்து வரப்போகும் தேர்வுகள் என்னென்ன தெரியுமா..?? தெரிஞ்சுக்க உடனே இதை படியுங்க..!!

0
TNPSC ???????????? ?????????? ????????? ???????? ????????..?? ??????????? ???? ??? ????????..!!
TNPSC அடுத்தடுத்து வரப்போகும் தேர்வுகள் என்னென்ன தெரியுமா..?? தெரிஞ்சுக்க உடனே இதை படியுங்க..!!

TNPSC அடுத்தடுத்து வரப்போகும் தேர்வுகள் என்னென்ன தெரியுமா..?? தெரிஞ்சுக்க உடனே இதை படியுங்க..!!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் மாநில சிவில் சர்வீஸ்களில் சேர விரும்பும் ஆர்வலர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் “குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்யின் படி 72 காலியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 47 வெவ்வேறு பதவிகளுக்கான 615 காலியிடங்களை நிரப்பும் நோக்கில், நடப்பாண்டிற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்ப போர்டல் மே 27 முதல் திறக்கப்படும்” என TNPSC அறிவித்துள்ளது.

மத்திய அரசில் Young Professional-II காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

இந்த “தொழில்நுட்ப சேவைகளுக்கான நேர்காணல் பதவிகளுக்கான அறிவிப்பு மே 7 அன்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு ஜூலை 21 அன்று நடத்தப்படவுள்ளது. நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான அறிவிப்பு மே 21 அன்று வெளியான நிலையில் தேர்வு ஆகஸ்ட் 4 அன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2025 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி டிப்ளமோ/ ITI நிலைக்கான அறிவிப்பு ஜூன் 13 அன்று வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப் 2, 2A நிர்வாகப் பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தேர்வானது செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் VA சேவைகள் அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விரிவான அறிவிப்புகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப விதிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ள http://www.tnpsc.gov.in வலைத்தளத்தைப் பார்வையிடும் படி அறிவுறுத்தப்படுகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!