NEET Answer Key 2025: தற்காலிக விடைக்குறிப்பு எப்போது வெளியாகும்..?? முழு விவரம் உள்ளே ..!!
நீட் (NEET) தேர்வு என்பது மருத்துவக் கல்வி படிப்புகளான MBBS, BDS, BSMS, BHMS போன்ற படிப்புகளில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு பொது நுழைவுத் தேர்வாகும். இத்தேர்வானது அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வை தேசிய தேர்வு முகமை அமைப்பு (NTA) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வானது மே 4, 2025 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள 5,453 மையங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் மொத்தம் 23 லட்சம் பேர் எழுதினர்.
BEL நிறுவனத்தில் Project Engineer-I காலிப்பணியிடங்கள் – ஊதியம் : ரூ.55,000/- || உடனே விரையுங்கள்!
இந்நிலையில் சென்னை ஆவடி நீட் தேர்வு மையத்தில் மின்தடை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட மனு குறித்து மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை (NTA) பதிலளிக்கும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே NEET தேர்வு விடைக்குறிப்பு 2025 வெளியிடவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தேர்வின் தகவல் அறிக்கையின்படி, “NTA தற்காலிக விடைக்குறிப்பு, கேள்விகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் பதில்களைப் பதிவு செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரூ.200 செயலாக்கக் கட்டணத்தை செலுத்தி தற்காலிக விடைக்குறிப்புக்கு எதிராக ஆன்லைன் சவாலைச் செய்ய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “விடைக்குறிப்பு வெளியானவுடன் பதிவிறக்கம் செய்ய neet.nta.nic.in வலைத்தளதிற்கு சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள NEET விடைக்குறிப்பு 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும். பின்னர் விண்ணப்பதாரர்கள் விவரங்களை சமர்ப்பிக்க தற்காலிக விசை காட்டப்படும். அது உங்களுடையதா என்று சரிபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் படி கூறப்பட்டுள்ளது”.
Join the ExamsDaily Whatsapp Group


























