ரயில்வேயில் 11,558 பணியிடங்களுக்கான RRB NTPC தேர்வு எப்போது?? வெளியான முக்கிய தகவல்!!
RAILWAY RECRUITMENT BOARD (RRB) ஆனது தொழில்நுட்பம் சாராத பிரிவில்(NTPC ) உள்ள Station Master, Chief Commercial Cum Ticket Supervisor போன்ற 11,558 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று வெளியிட்டது. மேலும், Graduate Level பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Under Graduate Level பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (23-05-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!
முன்னதாக RRB NTPC பணியிடங்களுக்கு அக்டோபர் 20 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்தது. பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 27 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.பல இளைஞர்கள் ரயில்வே வேலைகளுக்காக கடுமையாகப் படித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், RRB NTPC தேர்வுக்கான கணினி தேர்வு வரும் ஜூன் மாதத்தில் நடத்தப்படலாம் என்று ரயில்வே தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும் தேர்வு தேதி தொடர்பான அறிவிப்புக்காக விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது நமது tamil.examsdaily.in வலைத்தளத்தை பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
























