இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை.. போர் பதற்றத்தை குறைக்க முடிவு என தகவல்..!!

0
??????? - ?????????? ????? ????? ??????????????.. ???? ????????? ??????? ?????? ?? ?????..!!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை.. போர் பதற்றத்தை குறைக்க முடிவு என தகவல்..!!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை.. போர் பதற்றத்தை குறைக்க முடிவு என தகவல்..!!

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வரும் நிலையில் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதை தொடர்ந்து, போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில் இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (DGMO) இடையே ஹாட்லைன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு முதல் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடலில் பாகிஸ்தான் DGMO போர் பதற்றத்தை குறைக்க கோரியதாகவும் அதற்காக இந்திய தரப்பு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!