
சென்னை வழியே இலங்கை சென்றார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்..?? தீவிர சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை..!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும், இந்த படுகொலை தொடர்பாக தேசிய புலனாய்வு படையினர் (NIA) அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ISI மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. மேலும், பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், “பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளில் ஒருவரான ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் பாரா கமாண்டோவில் சிறப்புப் பிரிவான SSG-ஐ சேர்ந்த முன்னாள் வீரர்” என கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (03-05-2025) காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 6 பேர் சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்திய பிறகே பயணிகளை இறக்கி விட்டனர்”.


























