
உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிடித்தம் செய்யப்படுத்தா..?? இதை செய்தால் போதும் இனி அபராதம் கட்ட தேவையில்லை..!!
இன்றைய நவீன உலகில், டிஜிட்டல் வங்கிச் சேவையின் காரணமாக நிதிகளை நிர்வகிப்பது முன்பை விட எளிதாகிவிட்டது. மேலும், குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கவோ அல்லது தொந்தரவு இல்லாத வங்கிக் கணக்கை திறக்க விரும்பினால், பூஜ்ஜிய இருப்பு கணக்கு (Zero balance account) சரியான தீர்வாகும். ஏனென்றால் இந்த பூஜ்ஜிய இருப்பு கணக்கு தொடங்க எந்த ஆவணமும் தேவையில்லை. எனவே நீண்ட நேர காத்திருக்காமல் உங்கள் கணக்கை ஆன்லைன் மூலம் சுயமாக நீங்களே திறக்கலாம்.
இவ்வாறு ஆன்லைனில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு திறக்கும்போது, டெபிட் கார்டு, இணைய வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகள் போன்ற வழக்கமான சேமிப்பு கணக்கு விதிமுறைகளை பூர்த்தி செய்து அதன் நன்மைகளைப் பெறலாம். இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கை ஆன்லைனில் தொடங்குவதற்கு “முதலில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து புதிய கணக்கைத் திறப்பதற்கான பகுதியைத் தேடவும். பின்னர் ‘ஜீரோ-பேலன்ஸ் அக்கவுண்ட்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து கேட்கப்படும் தனிப்பட்ட தகவலை உள்ளிடவும். இதை தொடர்ந்து, KYC செயல்முறை மற்றும் நெட் பேங்கிங் சேவையை பூர்த்தி செய்தவுடன் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும். இதன் மூலம் உங்கள் கணக்கை நிர்வகிக்கவும் ஆன்லைனில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























