TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆகணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1,2,3 மற்றும் 4 தேர்வுகளை நடத்தி வருகிறது. பொது தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது மிகவும் முக்கியம்.இதற்கு தேர்வர்கள் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழில் அதிக மதிப்பெண்களை பெற முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடையவும்.
1. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
(A) கூகை கூவும்
(B) கூகை குனுகும்
(C) கூகை குழறும்
(D) கூகை அலறும்
(E) விடை தெரியவில்லை
விடை : C
2. ‘உழவர் பாட்டு’ என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
(A) தாலாட்டுப்பாட்டு
(B) கும்மிப் பாட்டு
(C) பள்ளுப்பாட்டு
(D) வில்லுப் பாட்டு
(E) விடை தெரியவில்லை
விடை : C
3. ‘வரதன்’ என்ற இயற்பெயரைக் கொண்டவர்
(A) நல்லாதனார்
(B) ஒட்டக்கூத்தர்
(C) காளமேகப் புலவர்
(D) குமரகுருபரர்
(E) விடை தெரியவில்லை
விடை : C
4. ‘மரமும் பழைய குடையும்’ ஆசிரியர்
(A) பாரதிதாசன்
(B) அழகிய சொக்கநாதப் புலவர்
(C) காளமேகப்புலவர்
(D) புதுமைப்பித்தன்
(E) விடை தெரியவில்லை
விடை : B
5. ‘நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்’ – இக்கூற்று யாருடையது?
(A) அர்ச்சுனன்
(B) தருமன்
(C) சகாதேவன்
(D) நகுலன
(E) விடை தெரியவில்லை
விடை : A
போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள் – என்னென்ன தெரியுமா?
6.ஆற்றூர் பேச்சு வழக்கில் ______என மருவியுள்ளது.
(A) ஆம்பூர்
(B) அரூர்
(C) அரசூர்
(D) ஆத்தூர்
(E) விடை தெரியவில்லை
விடை : D
7. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
(A) எம்.ஜி.இராமச்சந்திரன்
(B) மூதறிஞர் இராஜாஜி
(C) பெருந்தலைவர் காமராசர்
(D) கலைஞர் கருணாநிதி
(E) விடை தெரியவில்லை
விடை : C
8. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) ஜி.யு. போப்
(D) தேவநேயப்பாவாணர்
(E) விடை தெரியவில்லை
விடை : C
9. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
(A) பல்லவர்கள்
(B) பாண்டியர்கள்
(C) சோழர்கள்
(D) நாயக்கர்கள்
(E). விடை தெரியவில்லை
விடை : B
10. புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
(A) ஓவிய எழினி
(B) சிற்பக்கலை
(C) மெய்க்கீர்த்தி
(D) பைஞ்சுதை
(E) விடை தெரியவில்லை
விடை : C



























