இந்தியாவில் GPS அடிப்படையிலான சுங்க வசூல்..மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு மத்திய அரசால் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்வகிக்கிறது. மேலும், பல சுங்க சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் இதற்கு தீர்வு காணும் வகையில், Fastag நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயணிகள் காத்திருக்கும் நேரம் ஆனது குறைக்கப்பட்டது.
அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை.. பரஸ்பர வரிவிதிப்பை குறைக்குமா டிரம்ப் அரசாங்கம்..??
இதை தொடர்ந்து, அதை விட மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் அதாவது GPS பயன்படுத்தி சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு மே மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் “மே 1 ஆம் தேதி முதல் GPS முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என பரவும் தகவல் உண்மையல்ல என்றும், இது போன்ற எவ்வித முடிவையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சுங்கக் கட்டணம் செயல்முறையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது”.
























