அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை.. பரஸ்பர வரிவிதிப்பை குறைக்குமா டிரம்ப் அரசாங்கம்..??

0
?????????-???? ????? ??????????????.. ?????? ??????????? ?????????? ??????? ?????????..??
அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை.. பரஸ்பர வரிவிதிப்பை குறைக்குமா டிரம்ப் அரசாங்கம்..??

அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை.. பரஸ்பர வரிவிதிப்பை குறைக்குமா டிரம்ப் அரசாங்கம்..??

 

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர், சீனா அமெரிக்காவிற்கு எதிராக சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார் ட்ரம்ப். இதை தொடர்ந்து, அதிபராக பதவியேற்றதும் சீனா மீது கூடுதலாக 10 % வரி விதித்தார். அதன் பின்னர், மற்ற உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிவிக்கும்போது மீண்டும் சீனாவின் மீதான 34 % வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது சீனாவும் வரி விதித்தது. இவ்வாறு 2 நாடுகளும் பதிலுக்கு பதில் வரி விதிக்க தற்போது சீனாவின் மீதான அமெரிக்க வரி என்பது 245 % எட்டியுள்ளது.

புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவித்த முக்கிய தகவல்..!!

இதனால் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சீனாவின் வர்த்தக அமைச்சகம், “நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். அமெரிக்காவிற்கு இந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய வேண்டுமானால், அழுத்தம் கொடுப்பது, பயமுறுத்துவது, மிரட்டுவது போன்றவற்றை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது. மறுபுறம் சீனா பலமுறை கேட்டுக் கொண்டதால் தான் பேச்சுவார்த்தை நடத்துவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!