அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு..!! புதிதாக திருச்சி சிவா நியமனம்…!! என்ன காரணம் தெரியுமா..?

0
???????? ???????????? ???? ???????..!! ??????? ???????? ???? ???????...!! ???? ?????? ????????..?
அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு..!! புதிதாக திருச்சி சிவா நியமனம்...!! என்ன காரணம் தெரியுமா..?

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு..!! புதிதாக திருச்சி சிவா நியமனம்…!! என்ன காரணம் தெரியுமா..?

தமிழக அமைச்சரவையில் வனத்துறை பொறுப்பை வகித்து வருபவர் தான் பொன்முடி. உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த இவர், அண்மையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், உச்சநீதிமன்றம் இவரது தண்டனையை நிறுத்தி வைத்த காரணத்தால் இவருக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவு படுத்தும் விதமாக இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அடுக்கடுக்கான சர்ச்சை பேச்சுக்கள் :

திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர் பொன்முடியின் இது போன்ற சர்ச்சை பேச்சு இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரே, பெண்களை “ஓசி பஸ் பயணம்” எனவும், மனு குடுக்க வந்த பெண்ணிடம் சாதி பெயரை கூறி தாழ்த்தி பேசியதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

நகை பிரியர்கள் கவனத்திற்கு..!! ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

உட்கட்சி எதிர்ப்பு :

அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய பெண் தலைவராக பார்க்கப்படும் எம்.பியும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் ” அமைச்சரின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காக பேசப்பட்டு இருந்தாலும் இத்தகைய கொச்சையான பேச்சு கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

பதவி பறிப்பும் புதியவர் நியமனமும்:

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அவர் வகித்த வந்த திமுக துணை பொது செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவதாக முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த பதவியில் புதிதாக திருச்சி சிவா நியமிக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளார் . மேலும், இவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கக்கோரி எதிர்ப்புக்கள் வலுத்து வருகிறது.

 Join the ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!