
வரி வசூலில் சாதனை படைத்த இந்தியா..!! மார்ச் மாதம் மட்டும் இவ்வளவு கோடியா..?? நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது மக்களின் அன்றாட பொருட்கள் மற்றும் சேவைகளுக்குகாக மத்திய மற்றும் மாநில அரசு வசூலிக்கும் மறைமுக வரியாகும். இந்த வரியானது மார்ச், 2017 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜூலை 1, 2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் வரி வசூல் உயர்ந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி மார்ச் மாதத்தில் மட்டும் GST தொகையானது ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆண்டு பிப்ரவரி மாத GST வசூலுடன் ஒப்பிடுகையில் இந்த வரி வசூலிப்பானது 10% அதிகரித்துள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்”. இதை தொடர்ந்து, இந்த வரி வசூல் அதிகரிப்பு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என வருமான வரித்துறை பகுத்தாய்வு தெரிவிக்கிறது.


























