
IPL 2025: CSK vs RCB போட்டியை வென்றது பெங்களூர் அணி.. கடைசி ஓவரில் ரசிகர்களுக்கு தோனி கொடுத்த சர்ப்ரைஸ் ..
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய IPL 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (28-03-2025) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
என்னது..சமைக்க தெரிஞ்சா ரூ. 50,000 நிதி உதவியா…?? பெண்களே இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க…!!
இப்போட்டியில் பெங்களூர் அணியின் ரஜத் படிதார் (51), பில் சால்ட் (32), விராட் கோலி (31), தேவ்தத் படிக்கல் (27), டிம் டேவிட் (22) ஆகியோர் அதிகபட்ச ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து, சென்னை அணியின் ரச்சின் ரவீந்திரா (41), ஜடேஜா (25), எம்.எஸ்.தோனி (30) ஆகியோர் அதிகபட்ச ரன்கள் எடுத்தனர். மேலும், CSK அணியின் சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். மறுபுறம் RCB தரப்பில் யாஷ் தயாள், லியோம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பவர் ப்ளேயில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மேலும், நூர் அகமதின் பந்து வீச்சில் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்டை, தோனி மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்ததும், கடைசி ஓவரில் CSK விற்காக 16 ரன்கள் எடுத்ததும் சென்னை ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.























