
மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்.. எதிர்பார்க்காத அளவிலான சேதம்.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நாடான மியான்மர் அதன் வளமான பௌத்த கலாச்சாரம், பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுக்காக பெயர் பெற்றது. இந்நாட்டில் 55 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் “மியான்மரின் இன்று (28-03-2025) மண்டலே பகுதியில் 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கம் ஏற்பட்டது”.
இது குறித்து “அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, காலை 11.50 மணியளவில் ஒன்றும் பிற்பகல் 12:50 மணியளவில் மற்றொன்றும் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது”. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்து போக்குவரத்தானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “அடுத்த வாரம் தாய்லாந்தின் தலைநகர பாங்காக்கில் நடைபெற இருந்த BIMST-EC மாநாடு செல்ல உள்ள பிரதமர் மோடியின் அரசு பயணத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.























