தமிழகத்தின் 10 மாவட்டங்களில் சதமடிக்கப் போகும் வெப்பநிலை…!! வானிலை ஆய்வாளர்  எச்சரிக்கை

0
??????????? 10 ????????????? ?????????? ?????? ?????????...!! ?????? ???????? ??????????
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் சதமடிக்கப் போகும் வெப்பநிலை...!! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் சதமடிக்கப் போகும் வெப்பநிலை…!! வானிலை ஆய்வாளர்  எச்சரிக்கை

 

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (27.03.2025) முதல் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும்” என அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதி நிறுத்தம்…!! மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு  கண்டனம்

அதன்படி, “இந்த 10 மாவட்டங்களில் இயல்பை விட 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை (107 ℉) வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்” என தெரிவித்துள்ளார்.  இதனால், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!