
டெபிட் கார்டு இல்லாமல் UPI PIN செட் செய்வது எப்படி…?? இத பாலோவ் பண்ணி ஈஸியா இரண்டு நிமிடத்தில் பண்ணலாம்..!!
இன்றைய காலகட்டத்தில் சிறிய காய்கறி கடைகள் முதல் பெரிய மால்கள் வரை, சில வினாடிகளில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு UPI உதவுகிறது. அதற்கு, நம்மிடம் வங்கி கணக்கில் போதுமான பணம் மற்றும் வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணால் திறக்கப்பட்ட UPI ஐடியும் இருத்தால் போதும். இதையடுத்து, UPI மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கு 4 அல்லது 6 இலக்க UPI PIN இருந்தால் மட்டுமே முடியும். இதனை, டெபிட் கார்டு மூலம் மட்டுமே செட் செய்ய முடியும் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால், டெபிட் கார்டு இல்லாமல் UPI PIN செட் செய்யும் மற்றொரு வழிமுறையை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, உங்களுடைய UPI செயலியை திறந்து பேங்க் அக்கவுன்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதையடுத்து, UPI PIN யை செட் செய்வதற்கான ஆப்ஷனில், ஆதார் வகையை தேர்ந்தெடுத்து, முதல் 6 எண்ணை உள்ளிடவும். அதன்பின், உங்களுடைய ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளிடவும். இதையடுத்து, உங்களுக்கு தேவையான UPI PIN யை உருவாக்கி கொள்ளலாம். ஆனால், இந்த வழிமுறைகளை மேற்கொள்ள உங்களுடைய வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் ஒரே எண்ணாக இருப்பது அவசியமாகும்.

























