
வேறு வங்கி ஏடிஎம்களில் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உயர்வு…!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி தகவல்
பொதுவாக, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தவிர, வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையானது கட்டணமாக, வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், வங்கிகள் இந்த பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில், தற்போது ஏடிஎம்களில் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த ஆர்பிஐ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்களின் PF கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா..?? சரி செய்ய இந்த செயல்முறையை பின்பற்றினால் போதும்..
அதன்படி, ஒரு வங்கியில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏடிஎம்யில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ. 17 லிருந்து ரூ. 19 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பேலன்ஸ் சரிபார்த்தல் அல்லது மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் போன்றவற்றிற்கு ரூ. 6 லிருந்து ரூ. 7 ஆக கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம் சேவைகளை 5 முறை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், அதற்குமேல் பயன்படுத்துபவர்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.























