12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் எப்பொழுது..? சற்று முன் வெளியான முக்கிய அப்டேட்..!!
தமிழ் நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 3 தேதி தொடங்கி நேற்றுடன் ( மார்ச் 25 ) முடிவடைந்தது. மேலும் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு 3,316 மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இதன் தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இனி உங்க PF பணத்தை ஏடிஎம் யிலே எடுக்கலாம்…!! எப்போ அமலுக்கு வருதுன்னு தெரியுமா…?? இதோ உங்களுக்காக
அதாவது, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எனவே, இப்பணிகள் முடிந்த சில நாட்களில், அதாவது மே 9 ம் தேதி 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுக்குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























