7,535 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு – முழு விவரங்களுடன்!

0

7,535 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு – முழு விவரங்களுடன்!

தமிழக அரசானது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேச திட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும், நடப்பு ஆண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில், அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நூலகர்கள், உதவி இயக்குனர் (உடற்கல்வி) உள்ளிட்ட 232 பணியிடங்கள்.

மே மாதத்தில், காலியாக உள்ள இணை சட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்கள்.

ரயில் டிக்கெட் புக் செய்வது இவ்ளோ ஈஸியா? இது நல்லா இருக்கே!

ஜூலை மாதத்தில், காலியாக உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 4000 பணியிடங்கள்.

செப்டம்பர் மாதத்தில், முதல்வர்கள் ஆய்வு பணிகளுக்கு (சி.எம்.ஆர்.எப்) 180 மாணவர்கள் பணியிடங்கள் நவம்பர் மாதத்தில், காலியாக உள்ள முதுகலை உதவி பேராசிரியர்கள் 1915 பணியிடங்கள்.

டிசம்பர் மாதத்தில், காலியாக உள்ள பி.டி. உதவி அலுவலர்கள் மற்றும் பி.ஆர்.டி.இ ஆகிய 1205 பணியிடங்கள் மார்ச்-2026 ல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான 51 பணியிடங்கள் உள்ளிட்ட இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்கள் தேவைக்கேற்ப பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!