12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. மாணவர்களின் நிலை என்ன..?
பொதுத்தேர்வுகள் என்பது மாணவர்களின் அறிவாற்றல் திறனை சோதிக்க அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் தகுதி தேர்வாகும். அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் இப்பொதுத் தேர்வுகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “கடந்த மார்ச் 22 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாக தேர்வில் 2024 ஆம் ஆண்டு வினாத்தாள் எந்தவித மாற்றமின்றி நகல் எடுக்கப்பட்டு இந்த ஆண்டும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இத்தேர்வானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் புதிய தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்படுகிறது.


























