ரூ.37,000/- சம்பளத்தில் NIT திருச்சியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
??.37,000/- ??????????? NIT ???????????? ???? - ???????????????? ?????!
ரூ.37,000/- சம்பளத்தில் NIT திருச்சியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரூ.37,000/- சம்பளத்தில் NIT திருச்சியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு || முழு விவரங்களுடன்!

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது தான் கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!