
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் Technical Assistant வேலை – 30+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,12,400/- ஊதியம்..!
தேசிய விண்வெளி ஆய்வகங்கள் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical Assistant பணிக்கென 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் Diploma / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 6 ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























