
இனி அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் அதிக வரி விதிப்பு.. அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்..
இறக்குமதி வரி அல்லது ஏற்றுமதி வரி என்று அழைக்கப்படும் சுங்க வரி என்பது சர்வதேச எல்லைகளைக் கடந்து பொருட்களை நகர்த்துவதற்கு அந்நாட்டின் அரசாங்கத்தால் விதிக்கப்படும் ஒரு வரியாகும். இந்த வரியானது இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் மீது விதிக்கப்படுகிறது. மேலும், அரசாங்கம் தனது வருவாயை உயர்த்தவும், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும் மற்றும் பொருட்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும் இந்த வரிகளை வசூலிக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபரான டிரம்ப் மற்ற நாடுகள் மீது விதித்த இணையான வரி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நாளை மறுநாள் பூமிக்கு திரும்பவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.. எங்கு தரையிறங்க உள்ளார் என்று தெரியுமா..?
அதாவது, “அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், இந்தியா, சீனா உள்ளிட்ட சகா நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது குறித்த குற்றச்சாட்டை முன்வைத்த டிரம்ப், அந்நாடுகள் மீது அமெரிக்காவும் அதே அளவிலான வரி விதிக்க தொடங்கும் என்று கூறினார். அதன் படி ஏப்ரல் 2-ம் தேதி முதல், அமெரிக்காவுடன் நல்ல நட்புறவை கொண்டுள்ள நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு இணையாக பதில் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்”.

























