
நாளை மறுநாள் பூமிக்கு திரும்பவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.. எங்கு தரையிறங்க உள்ளார் என்று தெரியுமா..?
10 நாட்கள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், சுமார் 9 மாதங்களாக பூமிக்கு திரும்பி வர வழியின்றி விண்வெளியில் சிக்கியிருந்தனர். இவர்களை மீட்க NASA பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியாக எலான் மஸ்கின் Space X டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் விண்வெளி வீரர்களை மீட்க அனுப்பப்பட்ட ராக்கெட் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் மீட்பதற்காக சென்ற Space X இன் Crew 10 குழு நேற்று (16-03-2025) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் (19-03-2025) மாலை 3.27 மணிக்கு விண்வெளி வீரர்கள் அனைவரும் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருடன், NASA விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்யாவின் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் Space X Crew Dragon விண்கலத்தில் இணைந்துபூமிக்கு திரும்புவார்கள் என்றும், இந்த விண்கலமானது ப்ளோரிடா பாலைவனத்தில் தரையிறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

























