
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்…
தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் நாள்தோறும் கணித்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
“கனடா அமெரிக்காவாக மாறாது”.. கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அதிரடி பேச்சு..
அதாவது, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (11.03.2025) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதையடுத்து, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் சில உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

























