
புதிதாக 9 மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்க திட்டம்…!! மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு…!
தமிழகத்தில் உள்ள பெண்கள் வேலை மற்றும் கல்வி போன்ற காரணங்களுக்காக, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்கி வருகின்றனர். இதனால், தமிழ்நாடு அரசு பெண்களுக்காகவே குறைந்த வாடகையுடன் கூடிய ‘தோழி விடுதிகளை’ முதலில் சென்னையில் அறிமுகப்படுத்தியது. மேலும், அங்கு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது கூடுதலாக 9 மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்க உள்ளதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (08.03.2025) சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அறிவித்துள்ளார்.
அதாவது, காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கரூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் புதிதாக தோழி விடுதிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 72 கோடி ரூபாய் செலவில், 700 படுக்கை வசதிகளுடன் அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், 24 மணி நேர காவல் வசதி மற்றும் பயோமெட்ரிக் முறை ஆகிய சிறப்பம்சங்களுடன் தோழி விடுதிகள் இயங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


























