
“மருத்துவம், பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை”.. மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட சிறப்பு தகவல்..
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (07-03-2025) சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொழிற் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
“இனி கண்டிப்பாக அலுவலகத்திற்கு வர வேண்டும்”…பிரபல IT நிறுவனம் வெளியிட்ட புதிய உத்தரவு…!!
பின்னர், மத்திய தொழில் பாதுகாப்பு படை 56 ஆவது ஆண்டு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் தருகிறார் என்றும், தமிழ்நாட்டின் கலாச்சாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

























