
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மின்தடை கிடையாது.. இனி உங்க வேலைக்கு எந்த தடங்கலும் இருக்காது மக்களே..
தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் நோக்கில் அவ்வப்போது மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு பகுதிகளிலும் குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்படுகிறது. இவ்வாறு நிகழும் மின்தடை குறித்த முன்னறிவிப்பை மின்வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.
இவ்வாறு வெளியிடப்படும் எச்சரிக்கை அட்டவணையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் அதாவது மார்ச் 6 முதல் 10-ம் தேதி வரை எந்த மின்தடையும் நிகழாது என்று தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்கள் மின்தடை நிகழுமா அல்லது நிகழதா என்று குழப்பமின்றி மக்கள் தங்களது வேலைகளை வழக்கம் போல மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.























