
தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம்…!! சென்னையில் 3,500 நாய்களுக்கு பொருத்தியுள்ளதாக தகவல்…!!
சென்னை மேயர் பிரியா தலைமையில் கடந்த ஜனவரி மாதம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி சார்பில் நவீன மாட்டு கொட்டகைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்துதல் ஆகியவை உட்பட 112 திட்டங்களுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், தற்போது சென்னையில் உள்ள செல்ல பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த ‘மைக்ரோசிப் மற்றும் QR Code’ பொருத்தும் பணி இன்று (27.02.2025) முதல் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
PF வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு…!! EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
மேலும், இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 3,500 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், இத்திட்டத்தின் கீழ் விரைவில் மாடுகளுக்கு நவீன கொட்டகைகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு ரூ. 10 வாடகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஆடுகள் மற்றும் மாடுகளுக்கும் இந்த மைக்ரோ சிப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.


























