விவசாயிகளுக்கு உதவும் பி.எம்.கிசான் திட்டம் பற்றிய புதிய அப்டேட்.. பிரதமர் வெளியிடவிருக்கும் சிறப்பு அறிக்கை..

0
?????????????? ?????? ??.???.?????? ??????? ?????? ????? ???????.. ??????? ????????????????? ??????? ???????..

விவசாயிகளுக்கு உதவும் பி.எம்.கிசான் திட்டம் பற்றிய புதிய அப்டேட்.. பிரதமர் வெளியிடவிருக்கும் சிறப்பு அறிக்கை..

 

மத்திய அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டமானது விவசாயிகளுக்கு உதவும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம், மொத்தமாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், இதுவரை 18 முறை தவணை நிதி வழங்கப்பட்ட நிலையில் அடுத்த தவணை நிதி குறித்து தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.

 

“பதவியை ராஜினாமா செய்த  மணிப்பூர் முதல்வர்…!!”  மணிப்பூரில் இனி நடக்கப்போவது என்ன…?? முழு விவரம் உள்ளே..

அதாவது, “பிரதமர் நரேந்திர மோடி வரும் 2025, பிப்ரவரி 24 ஆம் தேதி பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் PM-Kisan திட்டத்தின் 19-வது தவணைக்கான அறிவிப்பை வெளியிடுவார் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்”. மேலும், இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் அனைத்து விவசாயிகளும் e-KYC (Electronic Know Your Customer) பூர்த்தி செய்வது கட்டாயமாகும். இதை தொடர்ந்து, “PM-Kisan திட்டத்தின் கீழ் தவணை நிதி பெற விரும்பும் விவசாயிகள் பேமென்டில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க தங்கள் வங்கியில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்றும், மேலும் விவசாயிகள் தங்களின் லேண்ட் வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிக்காமல் இருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் தவணை நிதி நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”. இந்த செயல்முறைகளை பூர்த்தி செய்யாத “விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்தை (CSC) அணுகலாம் அல்லது “pmkisan.gov.in” இணையதளம் மூலம் ஆன்லைனில் இந்த செயல்முறையை முடிக்க கூறி வலியுறுத்தப்பட்டுள்ளது”

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!