“நீட் தேர்வு எழுதும் மாணவர்களே…!!” ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம்..!! தேர்வு எப்போ தெரியுமா..?
தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் நுழைவு தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தான் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ், ஆயுர்வேத மற்றும் சித்தா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு குறித்து NTA தனது அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ‘வருகிற மே மாதம் 4 ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும்’ என அறிவித்துள்ளது. மேலும், ‘இத்தேர்வுக்கு இன்று (08.02.2025) தொடங்கி வருகிற மார்ச் 7ஆம் தேதி இரவு 11.50 மணி வரை NTA வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்’ என்றும் தெரிவித்துள்ளது


























