உங்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெயரின்றி பதிவு செய்யப்பட்டதா..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..

0
???? ??????????? ??????? ????????? ????????? ????? ?????????????..? ????? ????????? ?? ???????????????..
உங்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெயரின்றி பதிவு செய்யப்பட்டதா..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..

உங்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெயரின்றி பதிவு செய்யப்பட்டதா..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஆவணமாகும். இந்த பிறப்பு சான்றிதழில் பிறந்த குழந்தையின் பாலினம் என்னவென்று மட்டுமே மருத்துவமனை பதிவு செய்திருக்கும். இதில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே பிறப்பு சான்றிதழ் முழுமை பெறும். இந்நிலையில் குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் குழந்தை பிறந்த 12 மாதத்துக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் சம்பந்தப்பட்ட “பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம்” எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்யலாம்.

இதுவே 12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் வழிவகை படி பதிவு தாமத கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படும். மேலும், 2000-ம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு இந்த கால அவகாசத்தை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை அரசு நீடித்திருந்த நிலையில் இன்றோடு (31-12-2024) இந்த கால அவகாசம் முடிவடைகிறது. எனவே பதிவு செய்யாதவர்கள் பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் “சென்னை மாநகராட்சி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு” அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!