
மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் பங்கேற்கிறார்…!! “நடைபெறும் நாள் அறிவிச்சாச்சு”…!!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆனது அனைத்து தரப்பு மக்களாலும் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிக சிறப்பாக நடைபெறும். மேலும், 2025 ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு விதிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது ஜல்லிக்கட்டு விழா குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், வரும் ஜனவரி 16ம் தேதியன்று நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் துணை முதல்வர் பங்கேற்கிறார்.

























