ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்…!! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு..!!
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல் நடத்துவதற்கான “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை இன்று மதியம் 12 மணியளவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, பேசிய சண்டிகர் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சி, அமைப்புக்கு எதிரானது” என கூறினார். அதன் பின் பேசிய சமாஜ்வாதி கட்சி எம். பி தர்மேந்திரா யாதவ் “இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது” என சாடினார். அதற்கு அடுத்து பேசிய திரிமூணல் காங் எம்.பி கல்யாண் பானர்ஜி, ” மசோதா தேர்தல் சீர்திருத்தம் இல்லை, ஒருவரின் விருப்பத்தை நிறைவு செய்வதாக உள்ளது; அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்து விட முடியுமா..?” என கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து பேசிய திமுக எம்.பி டி. ஆர். பாலு” இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதே திமுகவின் நிலைப்பாடு; நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இவ்வாறு பல்வேறு கட்சி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


























