
மக்களுக்கு அலர்ட்…மீண்டும் இன்று(13.12.2024) தமிழகத்தில் உள்ள சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், பல்வேறு ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், சில பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அந்த வகையில், தொடர் கனமழை காரணமாக பூண்டியில் நீர்வரத்து உயர்ந்ததை தொடர்ந்து, தற்போது புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 21.30 அடி நீர்மட்டம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.69 அடி நீர்மட்டமாக அதிகரித்துள்ளதால், நீரவரத்தை இன்று(டிசம்பர் 13) காலை 9 மணி அளவில் வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், புழல், வடகரை, வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மணலி மற்றும் கொசப்பூர் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இன்று(13.12.2024) வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

























