
Today Vegetable Price:அடேங்கப்பா…இப்படியே காய்கறிகளின் விலை அதிகரித்தால் என்ன செய்வது..? “இதோ நீங்களே பாருங்கள்”..!!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், விளை நிலங்களில் உள்ள பயிர்கள் மழைநீரில் மூழ்கி பெரிதளவில் சேதமடைந்துள்ளன. மேலும், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்துக்களும் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
சென்னை கோயம்பேடு சந்தையில், 1 கிலோ தக்காளி 51 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 54 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 67 ரூபாய், பீட்ரூட் 50 ரூபாய், உருளைக்கிழங்கு 46 ரூபாய், அவரைக்காய் 44 ரூபாய், முட்டைகோஸ் 35 ரூபாய், கேரட் 48 ரூபாய், முருங்கைக்காய் 110 ரூபாய், கத்தரிக்காய் 35 ரூபாய், பீன்ஸ் 56 ரூபாய் , பூண்டு 333 , மற்றும் இஞ்சி 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


























