மதுரை மக்களே...டிசம்பர் மாதத்திற்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! " எங்கு நடக்க போகுது தெரியுமா"..??
மதுரை மக்களே…டிசம்பர் மாதத்திற்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! ” எங்கு நடக்க போகுது தெரியுமா”..??
தமிழக இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையமானது மதுரை மாநகரில் வரும் டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் மதுரை, தல்லாகுளத்தில் உள்ள சமூக அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும், வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை விரிவாக கீழே பார்க்கலாம்.
கல்வித்தகுதிகள்:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8th/10th/12th/ITI/diploma/degree/B.E முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு சிறப்பம்சங்கள்:
10000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நாளை வேலைவாய்ப்பு முகாமை மதுரையில் நடத்த உள்ளது. மேலும், இதில் உள்ளூர் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக MF Events என்ற நிறுவனமும் கலந்து கொள்கிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ முதலியவற்றின் நகல் மற்றும் அசலுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற லிங்க்கை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கூடுதல் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 0452 -2566022 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய இயக்குநர் டாக்டர். கா.சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில எங்கு நடக்கின்றது என்று கூறினால் எனக்கு உதவியாக இருக்கும்
Hii Mam .. இந்த வேலைவாய்ப்பு முகாம் உண்மையாவே 14/12/2024 தேதியில் நடக்க போகுதா நாங்க அட்டென் பண்ணலாமா?