சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் அதிகரிக்கிறதா? முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இக்கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்சமாக ரூ.250 செலுத்த வேண்டும்.
தங்க கடன் வழங்க கூகுள் பே முடிவு – தனிநபர் கடன் எவ்வளவு பெறலாம் தெரியுமா!
கடந்த சில ஆண்டுகளாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தி வருகிறது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் புதிய வட்டி விகிதங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த முறை சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும், அவ்வாறு வட்டி விகிதம் குறைந்தால், திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய வட்டி விகிதங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசு இன்று வெளியிட உள்ளது. PPF, SCSS, NSC, SSY, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாறலாம்.


























