தென் ஆந்திர கடலோரப்பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளை (அக்டோபர் 31) திண்டுக்கல், மதுரை, திருச்சி. கரூர், நாமக்கல், சேலம். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த கனமழை நவம்பர் . 2 ஆம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



























