ரேஷன் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்..!! வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இன்னும் 1 வாரத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 34,774 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் குடிமை பொருட்களை மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பெற வேண்டும் என்பதற்காக வருகின்ற அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்…!! ” அரசின் அசத்தல் அறிவிப்பு”..!!



























