நெருங்கியாச்சு தீபாவளி – இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

0

நெருங்கியாச்சு தீபாவளி – இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. புதுச்சேரி அரசு தங்கள் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 7000 ரூபாய் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 30 கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இலவச அரிசியை சிரமமின்றி பெறலாம்.

நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

கான்பெட் நிறுவனம் மூலம் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும். ரேஷன் கார்டுகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் அந்த 10 பொருட்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!