
தமிழக அரசின் 2 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.. வங்கி கடனில் சலுகை.. அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு என்பது மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களே உஷார்…இனி ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 ஃபைன்….!! ” அரசு அதிரடி உத்தரவு”…!!
அதன்படி CM Arise, தொல்குடி, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறலாம். CM Arise திட்டத்தில் தொழில் தொடங்க 35% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























