உங்களுக்கு 18 வயது ஆயிடுச்சா..!!அப்போ இதுல முதலீடு செஞ்சா ரூ.17 லட்சம் உங்களுக்குத்தான்..!!
இந்திய அரசானது நாட்டு மக்களின் சேமிப்புகளில் பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம் வழங்கும் வகையில் POST OFFICE சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டியுடன் கூடுதல் லாபத்தை வழங்குவதால், மக்கள் மத்தியில் இந்த திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில், RECURRING DEPOSIT(RD) எனப்படும் தொடர் வாய்ப்பு நிதியானது முதலீட்டாளர்களுக்கு 6.8% வட்டி வழங்கி வருகிறது. மேலும், RD திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கணக்கை தொடங்கலாம். இதில், குறைந்தபட்ச முதலீடு ரூ.100 தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும், உங்களுக்கு தேவைப்பட்டால் இதை மீண்டும் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். ஆனால், மாதாந்திர தேவைகளை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், 1% வட்டி வசூலிக்கப்படும். இது 4 நாட்கள் தொடர்ந்தால் கணக்கு தானாகவே மூடப்படும். மேலும், இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில், எப்படி ரூ. 17 லட்சத்தை பெறலாம் என்பதை கீழே பார்க்கலாம்.
அதாவது, நீங்கள் தினசரி ரூ.333 என்ற கணக்கில் பணத்தை சேமித்து வைத்து, மாதந்தோறும் ரூ.10,000 என்ற மதிப்பில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 ஆண்டுகள் கழித்து உங்களுடைய மொத்த முதலீடு ரூ. 5,99,700 ஆக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த 5 ஆண்டுகளில் உங்களுக்கு வட்டி வருமானம் மட்டுமே ரூ.1,15,427 கிடைக்கும். மேலும், இவ்விரு தொகையையும் சேர்த்து மொத்த முதிர்வு தொகையாக 7,17,827 ரூபாயை நீங்கள் பெறலாம். மேலும், இதை மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் பட்சத்தில், முதிர்வு தொகையாக மொத்தம் ரூ, 17,18,546 உங்களுக்கு கிடைக்கும்.
























