தீபாவளிக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்க முதல்வர் உத்தரவு..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக அரசு, அரிசி, கோதுமை , பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை மானிய விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்து வருகிறது.
சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?? வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்.. விவரம் உள்ளே!!
அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 21ம் தேதி முதல் தீபாவளி பரிசாக மக்களுக்கு 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக உயர்த்தப்பட்ட உதவித்தொகை நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



























